ரூ.31.01 லட்சத்தில் 2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் மட்டுமே ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவோ கிடைக்க உள்ளது.
2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo
மெக்கானிக்கல் வசதிகள் மற்றும் ஆற்றல், டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் தோற்ற அமைப்பில் மட்டுமே பெற்றுள்ள இந்த எஸ்யூவி மாடலில் இன்டிரியரில் குறிப்பிடதக்க வசதிகள் பெற்றுள்ளது.
TRD என்றால் Toyota Racing Development என்பது விளக்கமாகும். 177 HP ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 420 Nm டார்க்கினை வழங்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பெற்றதாக வந்துள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக 4×2 டிரைவில் மட்டுமே கிடைக்க உள்ளது.
தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருப்பு நிற கிரிலுடன் கூடிய மிக சிறப்பாக கம்பீர தன்மையை வெளிப்படுத்துவதுடன் TRD பேட்ஜினை பெற்றுள்ளதுடன் பக்கவாட்டில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் டிஆர்டி ஸ்டிக்கரிங் பெற்றுள்ளது.
சிவப்பு நிற அசென்ட்ஸ் பெற்றதாக சென்ட்ரல் கன்சோல் அமைப்பில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன், ரியர் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ், இபிடி, 7 காற்றுப்பைகள் உள்பட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.
2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo விலை ரூ.31.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)