குறைந்த உயரம் உள்ளவர்களும் ஓட்டும் வகையில் பல்வேறு மாறுதல்களுடன் மிகச் சிறப்பான ஸ்டைலிங் மற்றும் நிறங்கள் என கவர்ச்சிகரமாக வந்துள்ள ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) பாபர் விற்பனைக்கு நவம்பர் 23ஆம் தேதி மோட்டோவெர்ஸ் 2024 அரங்கில் விலை அறிவிக்கப்பட உள்ளது.
அடிப்படையில் கிளாசிக் 350 பைக்கில் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்கள் பெற்றிருந்தாலும் கூட ஸ்டைலிங் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்லாமல் சில மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் கவனமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக ரேவ் ரெட், டிரிப் டீல், பர்பிள் ஹெஸ், மற்றும் ஷேக் பிளாக் என நான்கு வித வண்ணங்களை பெற்று மிக நுணுக்கமான கஸ்டமைஸ் பாடி கிராபிக்ஸ் நிறத்திற்கு ஏற்ப மாறுபட்டுள்ளது.
கிளாசிக் 350 vs கோன் கிளாசிக் 350 வித்தியாசங்கள் என்ன..?
இரண்டு பைக்கிற்கும் இடையில் இருக்கை உயரம் மாறுபட்டுள்ளது. குறிப்பாக கிளாசிக் 350 மாடல் 805 மிமீ ஆக உள்ள நிலையில் கோன் கிளாசிக் மாடல் 750 மிமீ ஆக உள்ளது.
வழக்கமான ஹேண்டில் பார் கொடுக்கப்படாமல் அபே ஹேண்டில் பார் 110மிமீ உயரமாக வழங்கப்பட்டு, புகைப்போக்கி வித்தியாசமாகவும், வெள்ளை வால் பெற்ற டயர் ஸ்போக்டூ வீல் ட்யூப்லெஸ் முறையில் வழங்கப்பட்டுள்ளது.
ஃபூட்பெக் சற்று முன்புறம் தள்ளி வைக்கப்பட்டு மீட்டியோரை போல அமைந்து மிக ரிலாக்ஸான ரைடிங் பொசிஷனை கொண்டுள்ளது. மேலும் கிளாசிக் 350 மாடலை விட கூடுதலாக 10 மிமீ வீல்பேஸ் பெற்று மாறுபட்ட நிறங்களுடன் கஸ்டமைஸ்டு பைக் போல கோன் கிளாசிக் உள்ளது. முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்றாலும் பின்புறத்தில் 16 அங்குல வீலினை பாபர் பைக் பெறுகின்றது.
பல்வேறு பாகங்கள் கிளாசிக் 350 பைக்கில் இருந்து பெற்றாலும் சிறிய அளவிலான மாறுதல்கள் மூலம் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ளுகின்றது.
கோன் கிளாசிக் 350 மாடலிலும் வழக்கமான J-series 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
இந்த மாடலிலும் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பரை பெற்று பிரேக்கிங் அமைப்பில் இரு பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குகுடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. இந்த பைக்கின் 90 சதவீத எரிபொருளுடன் 197 கிலோ எடை உள்ளது.
வரும் நவம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ராயல் என்ஃபீல்டின் கோன் கிளாசிக் 350 விலை ரூ.2.20 லட்சத்தில் துவங்கலாம்.