தொடக்க நிலை அட்வென்ச்சர் பைக்குகள் மீதான வரவேற்பு அதிகரிக்கும் நிலையில் யமஹா FZ25 அடிப்படையிலான அட்வென்ச்சர் பைக் மாடலை தயாரிக்கும் திட்டம் குறித்து யமஹா ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 200சிசி- 500 சிசி சந்தையின் விற்பனை உயர்ந்து வரும் நிலையில் ஸ்டீரிட் ஃபைட்டர், ஃபேரிங் ரக மாடல்களை தொடர்ந்து பெரும்பாலான நிறுவனங்கள் அட்வென்ச்சர் மீதான கவனத்தை திருப்பியுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 , ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 410 போன்ற மாடல்கள் குறைவான விலையில் கிடைத்து வருகின்றது.
என்ஃபீல்டு ஹிமாலயன், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் போன்ற மாடல்களுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் , 250 அட்வென்ச்சர் என இரு மாடல்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்நிலையில், யமஹா நிறுவனம், தனது FZ25 பைக்கின் அடிப்படையில் அட்வென்ச்சர் மாடலை உருவாக்கம் வாய்ப்புகள் மற்றும் சந்தையின் சூழலை ஆய்வு செய்து வருகின்றது.
தற்போது விற்பனையில் கிடைக்கின்ற FZ25 சிறப்பான வரவேற்பினை பெற்றிருப்பதுடன் ஜிக்ஸர் 250, கேடிஎம் 250 டியூக் போன்ற மாடல்களை நேரடியாக எதிர்கொள்கின்றது. யமஹா மட்டுமல்லாமல் சுசுகி நிறுவனமும் ஜிக்ஸர் 250 அடிப்படையில் அட்வென்ச்சரை உருவாக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
ஆதாரம் – bikewale.com