113சிசி என்ஜினுக்கு பதிலாக பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற 125சிசி என்ஜினை பெற்ற யமஹா ஃபேசினோ ஸ்கூட்டரை ரூ.ரூ.66,430 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஃபேசினோ தவிர யமஹா ரே இசட்ஆர் ஸ்கூட்டரிலும் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ்4 நடைமுறையுடன் 110சிசி என்ஜின் பெற்ற யமஹா ஸ்கூட்டர்களுக்கு விடை கொடுக்க உள்ளது.
ஃபேசினோ 125 மாடல் முன்பாக விற்பனையில் உள்ள 110சிசி ஃபேசினோ ஸ்கூட்டரின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் பெற்றுள்ளது.. முன்புறம் தோற்றம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் பக்கவாட்டு மற்றும் பின்புற அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் புதிய டெயில் லைட் உள்ளது. விற்பனையில் உள்ள ஃபேசினோ மாடலை விட கூடுதல் அகலத்தை பெற்ற டயரை கொண்டுள்ளது.
8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 9.7 என்எம் டார்க் வழங்குகின்றது. முன்பாக விற்பனையில் உள்ள 113சிசி மாடலை விட சிறப்பான முறையில் 16 சதவீதம் எரிபொருள் சிக்கனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, யமஹா ஃபேசினோ 125 மைலேஜ் லிட்டருக்கு 58 கிமீ ஆகும்.
STD Drum Brake – Rs 66,430
STD Disc Brake – Rs 68,930
DLX Drum Brake -Rs 67,430
DLX Disc Brake – Rs 69,930
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)