டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் 110சிசி பைக் மாடலாக விளங்குகின்ற ரேடியானில் பிஎஸ் 6 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு ரூபாய் 59,092 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.6,600 முதல் ரூ.8,600 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில் அதிகபட்ச விருதுகளை வென்றுள்ள ரேடியானில் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு Fi பெற்ற 109.7cc, சிங்கிள்-சிலிண்டர், 3-வால்வுகளுடன், ஏர் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,350 rpm-ல் 8.08bhp பவரும், 8.7Nm டார்க்கை 4,500rpm-ல் வழங்குகின்றது. இது முந்தைய பிஎஸ்4 மாடலை விட 15 சதவீதம் வரை கூடுதலான மைலேஜ் தரவல்லதாகும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நிறங்களை ரேடியான் பைக் பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஆயில் சஸ்பென்ஷன் மற்றும் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது.
டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்-6 விலை பட்டியல்
பேஸ் வேரியண்ட் – ரூ.59,092
டிவிஎஸ் ரேடியான் டிரம் பிரேக் ரூ. 62,092
ரேடியான் டிஸ்க் பிரேக் – ரூ.65,092