ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை பட்டியல் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் மாடல் முதல் 650 சிசி என்ஜின் பெற்ற ட்வீன்ஸ் வரை விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் மிக நீண்டகாலமாக தயாரிப்பில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், காலத்துக்கு ஏற்ப புதிய வசதிகளை இணைத்து வருகின்றது. அந்த வகையில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் 125சிசிக்கு அதிகமான பைக்குகளில் பொருத்துவது கட்டாயமாகும்.
ராயல் என்ஃபீல்டு பைக் விலை பட்டியல்
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்ட புல்லட் 350, புல்லட் 350 ES மாடலை சமீபத்தில் விற்பனைக்கு வெளியிட்டது. அதன் விலை உட்பட 650 சிசி என்ஜின் பெற்ற என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 பைக் விலையும் இந்த பட்டியிலில் அறிந்து கொள்ளலாம்.
மாடல் | விலை (ex-showroom Delhi) |
புல்லட் 350 | ரூ. 1.21 லட்சம் |
புல்லட் 350 ES | ரூ. 1.35 லட்சம் |
கிளாசிக் 350 | ரூ. 1.53-1.63 லட்சம் |
தண்டர்பேர்டு 350 | ரூ. 1.56 லட்சம் |
Bullet 350 Trials Works Replica | ரூ. 1.62 லட்சம் |
தண்டர்பேர்டு 350X | ரூ. 1.63 லட்சம் |
ஹிமாலயன் | ரூ. 1.80- 1.82 லட்சம் |
புல்லட் 500 | ரூ. 1.88 லட்சம் |
கிளாசிக் 500 | ரூ. 2.01-2.11 லட்சம் |
தண்டர்பேர்டு 500X | ரூ. 2.06 லட்சம் |
புல்லட் 500 டிரையல்ஸ் Works Replica | ரூ. 2.07 லட்சம் |
தண்டர்பேர்டு 500X | ரூ. 2.14 லட்சம் |
இன்டர்செப்டார் 650 | ரூ. 2.50-2.70 லட்சம் |
கான்டினென்டினல் GT 650 | ரூ. 2.65-2.85 லட்சம் |