பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு ரைடிங் கியர்ஸ், ஆடை மற்றும் ஆக்செஸரிகளுக்கு என பிரத்தியேகமான 40 சதவீத சலுகையை என்ட் ஆஃப் செஸன் சேல் என்ற பெயரில் அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு ரைடிங் கியர்ஸ்
நீண்ட பாரம்பரியம் மிக்க நமது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது பிராண்டின் ரைடிங் கியர்ஸ் மற்றும் துனைக்கருவிகளை மிக நேர்த்தியாக வடிவமைத்து விற்பதில் முன்னணி இடத்தில் உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் ஃபிளையிங் ஃபிலா என்ற குறைந்த எடை கொண்ட மோட்டார்சைக்கிளின் உந்துதலில் வடிவமைக்கப்பட்ட என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மாடலை வெளியிட்டிருந்தது.
என்ஃபீல்டு என்ட் ஆஃப் செஸன் சேல் என்ற பெயரில் ஜூன் 29, 2018 முதல் ஆகஸ்ட் 15, 2018 வரை குறிப்பிட்ட சில ரைடிங் கியர்களுக்கு 40 சதவீத விலை குறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக ஹெல்மெட், ஜாக்கெட், ஜீன்ஸ், ஷர்ட்ஸ், பைக் கவர்ஸ் , கிளோவ்ஸ், சேடல்பேக், ஐவியர், ரெயின் ஜாக்கெட்ஸ் மற்றும் மேலும் பல.,
இந்த சிறப்பு விலை குறைப்பு சலுகை அனைத்து ராயல் என்ஃபீல்டு பிராண்டு ஸ்டோர், டீலர்கள், பிரத்தியேக கியர் ஸ்டோர் , ஆன்லைன் மற்றும் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகார்வபூர்வ https://store.royalenfield.com/ என்ற இணையதளத்திலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.