நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையின் முதன்மையான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது 500சிசி சந்தையில் உள்ள மாடல்களை பிஎஸ்-6 நடைமுறைக்கு மாற்றுவதனை கைவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஎஸ்-6 நடைமுறைக்கு மாற்றும் போது அதிகரிக்கின்ற செலவினை கருத்தில் கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ள நோக்கத்தினால் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள அனைத்து மாடல்களும் 350சிசி மற்றும் 500சிசி என இரு பிரிவுகளிலும் கிடைத்து வரும் நிலையில், இந்தியளவில் 350சிசி மாடல்களுக்கு இணையான வரவேற்பினை 500சிசி புல்லட், தண்டர்பேர்டு மற்றும் கிளாசிக் போன்ற மாடல்கள் பெறாத நிலையில், ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான முறைக்கு மேம்படுத்துவதற்கு 500சிசி மாடல் அதிகப்படியான செலவுகளை பெறுவதனால் கைவிட வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
மேலும், 500சிசி புல்லட், தண்டர்பேர்டு மற்றும் கிளாசிக் மாடல்கள் உள்நாட்டில் மட்டும் விற்பனை நிறுத்திக் கொள்ளவும், வெளிநாடுகளில் தொடர்ந்து 500சிசி மாடல்கள் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி, அனைத்து ராயல் என்ஃபீல்டு மாடல்களும் பிஎஸ்-6 நடைமுறைக்கு மேம்படுத்தப்பட உள்ளது.
புல்லட் 500, தண்டர்பேர்டு 500 மாடல்களுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளது. இது தவிர புல்லட் ட்ரையல்ஸ் பைக்கிற்கான முன்பதிவும் நீக்கப்பட்டுள்ளது. கிளாசிக் 500 மாடல் இருப்பில் உள்ள வரை மட்டும் முன்பதிவு மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்டமாக பிஎஸ்6 என்ஜினை பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த மாடலை விட ரூ.11,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.