சர்வதேச அளவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கான மிகப்பெரிய ஆலையை தமிழ்நாட்டில் ரூ.2,400 கோடி முதல் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அமைக்க உள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக அமையலாம்.
நெதர்லாந்தின் இடர்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை ஓலா கையகப்படுத்தியதை தொடர்ந்து மிக தீவரமாக பேட்டரி ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தின் ஓசூரில் ரூ.2,400 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் கொண்ட ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த ஆலை வாயிலாக 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.
ஓலாவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்ற ஸ்கூட்டர்கள் இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
“உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான எங்கள் திட்டங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று ஓலாவின் தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறினார்.
உலகளாவிய சந்தைகளை பூர்த்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை தயாரிப்பதற்கான இந்தியாவின் திறமை மற்றும் திறமையை வெளிப்படுத்தும் எனவும், இது எங்கள் சேவையின் மிகப்பெரிய மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட உள்ளது.
ஓலா ஆப்ஸ்கூட்டர் சிறப்புகள்
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Etergo நிறுவனம், மிக சிறப்பான டிசைனை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆப்ஸ்கூட்டர் (AppScooter) 2018 ஆம் ஆண்டு முதன்முறையாக விற்பனைக்கு வெளியானது.
நவீனத்துவமான வடிவத்தை கொண்ட இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் பெற்று மூன்று பேட்டரியை கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பேட்டரியும் 80 கிமீ பயணிக்கும் திறனை கொண்டுள்ளதால், முழுமையான சிங்கிள் பேட்டரி சார்ஜில் 240 கிமீ பயணிக்கும் திறன் கொண்டிருக்கும்.
0- 45 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஷாக் அப்சார்பர் பெற்று இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 12 அங்குல அலாய் வீல் பெற்றதாக அமைந்துள்ளது.
7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்ற ஆப்ஸ்கூட்டர் வை-ஃபை, ப்ளூடூத் ஆதரவு, நேவிகேஷன், பாடல்கள், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை பெற்றிருக்கின்றது.