புதிய ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 ஸ்கூட்டரை இந்தியாவின் மிகப்பெரிய டூ வீலர் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள பிளெஷரின் அடிப்படையில் ஸ்டைலிஷாக அமைந்துள்ளது.
ரூ.47,300 விலையில் ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 (சீட் மெட்டல் வீல்) மற்றும் அலாய் வீல் கொண்ட பிளெஷர் + விலை ரூ. 49,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள விலை டெல்லி எக்ஸ்ஷோரூம் மதிப்புடையதாகும். கூடுதலாக ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
ஹீரோ பிளெஷர் பிளஸ் 110
பெண்களுக்கான மிக ஸ்டைலிஷான் ஸ்கூட்டர் மாடலாக தொடர்ந்து பிளெஷர் பிளஸ் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. 110சிசி என்ஜின் கொண்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 8.1hp மற்றும் 8.7Nm டார்க் வழங்கவல்லதாக விளங்கலாம்.
மிக நேர்த்தியான ஸ்டைலை கொண்ட ஹெட்லைட் பெற்று முன்பற அப்ரான் ஸ்டைலிஷாக வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் ஸ்டைலிஷான பேனல்கள் கொண்டதாக அமைந்துள்ளது. டெயில் லைட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை விட ரூ.2,200 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 102 சிசி என்ஜின் பொருத்தப்பட்டதாக பிளெஷர் ஸ்கூட்டர் கிடைத்து வந்தது இங்கே குறிப்பிடதக்கதாகும்.