டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 என்ஜினை பெற்ற அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் உட்பட ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கிலும் புதிய மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினை வழங்கி விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
ரூ.93,500 ஆரம்ப (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் கார்புரேட்டர் கைவிடப்பட்டு இதற்கு மாற்றாக எஃப்ஐ என்ஜின் ஆக வழங்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில் நெரிசல் மிகுந்த இடங்களில் சுலபமான முறையில் ரைடிங் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கிளைட் டெக்னாலாஜி பெற்றதாக வந்துள்ளது.
பிஎஸ்6 என்ஜினிஙல் கவனிக்கதக்க அம்சமாக என்ஜின் பவர் மற்றும் டார்க் உயர்த்தப்பட்டுள்ளது. 159.7 சிசி, ஒற்றை சிலிண்டர், இரண்டு வால்வு மோட்டார் இப்போது 15.5 ஹெச்பி பவர் மற்றும் 13.9 என்எம் டார்க்கை வழங்குகிறது. முன்பாக பிஎஸ்4 மாடலில் 15.1 ஹெச்பி மற்றும் 13 என்எம் டார்க் வெளிப்படுத்தியது.
மற்றபடி தோற்ற அமைப்பு, டெக் விபரங்களில் எந்த மாற்றமுமில்லை. ஆறு வண்ண விருப்பங்களை பெற்றுள்ளது. அவை பேர்ல் ஒயிட், மேட் ப்ளூ, மேட் ரெட், கருப்பு, சிவப்பு மற்றும் கிரே ஆகும். ஆர்டிஆர் 160 புதிய விதமான கிராபிக்ஸ் பெறுகிறது. மோட்டார் சைக்கிள் முன்பதிவு இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து டிவிஎஸ் டீலர்ஷிப்களிலும் திறக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்4 மாடலை விட ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டு, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரூ. 93,500 (டிரம்) மற்றும் ரூ .96,500 (டிஸ்க்) ஆகும்.