மேம்படுத்தப்பட்ட மற்றும் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக் மாடலானது அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ளது. முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட டிராகேன் X21 கான்செப்ட் உந்துதலை பெற்றதாக படம் வெளியானது.
முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகளைப் பெற்றதாக வரவிருக்கும் அப்பாச்சி 160 பைக்கில் குறிப்பாக எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், மற்றும் ஸ்டைலிஷான டேங்க் எக்ஸ்டென்ஷன் போன்றவை முரட்டுத் தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.
மேலும் இந்த பைக்கில் புதிதாக ப்ளூடுத் பேரிங் ஆதரவு கொண்ட எல்சிடி இண்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம் பல்வேறு வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்புகள் ஆகியவற்றை கொண்டிருக்கும். அதாவது என்டார்க் 125 ஸ்கூட்டரில் உள்ளதை விட மேம்பட்டதாக இந்த கிளஸ்ட்டர் இருக்கலாம்.
மேலும் என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 159சிசி என்ஜினை அப்பாச்சி RTR 160 4V பைக் பெற்றிருக்கும். தற்பொழுது சோதனை ஓட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.
image credit – bikewale