ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள பிஎஸ்6 (BS6) ஆக்டிவா 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோவின் ஐ3எஸ் போன்ற ஐடிலிங் ஸ்டாப் சிஸ்டத்தை பெற்றுள்ள ஆக்டிவா 125-ல் பல்வேறு அம்சங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
6 விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஆக்டிவா 125 மாடலுக்கு என 6 வருட வாரண்டியை ஹோண்டா அறிவித்துள்ளது. 6 வருட வாரண்டி என்பது மூன்று வருட ஸ்டாண்டர்டு வாரண்டி, கூடுதலாக மூன்று வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டியை பெற்றதாக வந்துள்ளது. மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை தொடர்ந்து ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்றதாக 125சிசி ஆக்டிவா மாடலும் வந்துள்ளது. இந்தியாவின் முதல் பிஎஸ் 6 ரக இரு சக்கர வாகன என சான்றிதழை பெற்ற ஸ்பிலெண்டர் ஐஸ்மார்ட் மாடலை தொடர்ந்து ஆக்டிவா 125 பிஎஸ் 6 மாசு உமிழ்வு என்ஜின் பெற்றதாக வந்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 125 சிறப்புகள்
ஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 6 அல்லது பிஎஸ் 6 நடைமுறை செயற்படுத்த உள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற என்ஜினை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளன. இந்தியாவின் முன்னணி ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா தனது பிரபலமான ஆக்டிவா 125 மாடலை முதல் பிஎஸ்6 மாடலாக விற்பனைக்கு வெளியிட உள்ளது.
Honda’s Enhanced Smart Power (eSP) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் அதிக ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக எரிபொருளுளை எரிக்கும் தன்மை கொண்டுள்ளது.
ஆக்டிவா 125 மாடலுக்கு என 26 வகையான புதிய நுட்பங்களுக்கு ஹோண்டா நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரில் PGM-FI (Programmed Fuel Injection) பயன்படுத்தப்பட்ட என்ஜின் பொருத்தப்பட உள்ளது. மேலும் இந்த இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது சத்தமில்லாமல் இருக்க ACG மோட்டார் நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளது.
புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில், சைடு ஸ்டேண்டு இன்டிகேட்டர், நிகழ் நேரத்தில் எரிபொருள் சிக்கனத்தை அறிகின்ற வசதி, எல்இடி ஹெட்லைட், இருக்கை அடியில் உள்ள ஸ்டோரேஜ் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள பெட்ரோல் நிரப்பிக் கொள்ள டூயல் ஸ்விட்ச் ஆப்ஷன் போன்றவறை கொண்டுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 2019 முதல் இந்தியாவில் பிஎஸ் 6 ரக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட 10 சதவிகிதம் வரை விலை அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.