Bike News பிஎஸ்6 ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 Fi விற்பனைக்கு வந்தது Last updated: 29,January 2020 2:41 pm IST MR.Durai Share 2020 ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 fiவிற்பனையில உள்ள ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 fi மாடலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பிஎஸ்6 என்ஜின் பெற்றிருப்பதுடன் விலை ரூ.6,300 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.54,800 விலையில் துவங்குகின்றது.பிஎஸ்4 என்ஜின் பவரில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்றதாக 110.9 சிசி என்ஜின் கொண்டிருக்கின்ற இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 8 hp குதிரைத்திறன் மற்றும் 8.7Nm டார்க் வழங்கவல்லதாக விளங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.7 நிறங்களை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட சிவப்பு, பச்சை, கிரே நிறங்கள் உட்பட கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களும் இடம்பெற்றுள்ளன.கடந்த மே மாதம் புதுப்பிக்கப்பட்ட வேரியண்ட் வெளியானதை தொடர்ந்து எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. புதிய ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 fi ஸ்கூட்டரில் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிஷான டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர் , ஓடோ மீட்டர், எரிபொருள் அளவு, மற்றும் சைடு ஸ்டேன்டு இன்டிகேட்டர் போன்றவை உள்ளது. அடுத்தப்படியாக யூஎஸ்பி சார்ஜர் மற்றும் க்ளோவ்பாக்ஸ் போன்றவற்றை பிளஷர் ப்ளஸ் பெற்றதாக வந்துள்ளது.ஹீரோவின் பிளெஷர் பிளஸ் 110 fi ஸ்கூட்டர் ஆரம்ப விலை ரூ.54,800 (ஸ்டீல் சீட் வீல்) மற்றும் கேஸ்ட் வீல் கொண்ட பிளெஷர் + 110 விலை ரூ. 56,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் விற்பனைக்கு வெளியான ஆக்டிவா 6ஜி, டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் போன்ற மாடல்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. TAGGED:Hero Pleasure Plus 110 Share This Article Facebook Previous Article பிஎஸ்6 ரெனால்ட் க்விட் கார் விற்பனைக்கு வெளியானது Next Article விரைவில் ஏதெர் 450 மின்சார ஸ்கூட்டர் நீக்கப்படுகின்றது