சென்னையில் தொடங்கப்பட்டுள்ள பிளாக்ஸ்மித் மின்சார பைக் நிறுவனத்தின் பி2 க்ரூஸர் பைக் மாடல் சிங்கிள் பேட்டரியில் அதிகபட்சமாக 120 கிமீ மற்றும் இரண்டு பேட்டரியை பயன்படுத்தும் போது 240 கிமீ பயணத்தை மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக்ஸ்மித் பி 2 மாடல் க்ரூஸர் ரக ஸ்டைலிங் பெற்ற பைக்காகும். முழுமையான சார்ஜிங் செய்ய 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதுடன் 5 கிலோவாட் ஹவர் மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120 கிமீ பயணிக்கும் வரம்புடன் அதிக பவரை வழங்கும் அடர்த்தி கொண்ட NMC பேட்டரி பேக் உடன் திறன்மிகுந்த ப்ளூடூத் பிஎம்எஸ் மற்றும் உயர் திறன் கொண்ட ஏசி கன்ட்ரோலருடன் வரவுள்ளது. பி 3 அதிகபட்சமாக 14.5 கிலோவாட் (19.44 பிஹெச்பி) சக்தி மற்றும் உச்ச முறுக்கு விசை 96 என்எம் ஆகும். பிளாக்ஸ்மித் பி3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் இயங்கும் ஜி.பி.எஸ், அதே போல் திருட்டை தடுப்பதற்கான அலாரத்துடன் வரவுள்ளது.
பிளாக்ஸ்மித் பி2 மாடலில் மிகவும் வித்தியாசமான மற்றும் புதுமையான தனித்தன்மையை கொண்ட டர்ன் இன்டிகேட்டரை வழங்க உள்ளது. இதற்காக காப்புரிமை கோரியுள்ளது. இரு புறங்களிலும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், 18 அங்குல வீல், 200 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றிருக்கும்.
ஒரே சமயத்தில் இரண்டு பேட்டரிகளை பயன்படுத்தும் போது அதிகபட்சமாக 240 கிமீ பயணிக்க இயலும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு தனது அறுமுக ராஜேந்திர பாபு இனை தலைவராக கொண்டு தொடங்கப்பட்ட பிளாக்ஸ்மித் நிறுவனத்தின் டெக்னாலாஜி பிரிவின் தலைவராக A.R. கார்த்திகேயன் உள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் முன்மாதிரி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பிற்கான நுட்பத்தை உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது நான்காம் தலைமுறை நுட்பத்தை கொண்டு சோதனை செய்து வருகின்றது. 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.
பிளாக்ஸ்மித் பி3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பி2 க்ரூஸர் மாடல் என இரு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் பேட்டரியை ஸ்வாப் செய்வதற்காக பிளாக்ஸ்மித் எக்ஸ்சேஞ்ச் நிலையங்களை உருவாக்கவும் உள்ளது.