ஆர்.ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டில் A2 மற்றும் B8 என இரு மின் ஸ்கூட்டர்களின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு ரூ.3,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. முன்பதிவு பிகாஸ் இணையதளத்தில் துவங்கப்பட்டுள்ளது.
பிகாஸ் A2 ஸ்கூட்டர் விலை
குறைந்த வேகம் பெற்ற பிகாஸின் ஏ2 ஸ்கூட்டரில் லித்தியம் மற்றும் லெட் ஆசிட் பேட்டரி என இரண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏ2 மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 250 வாட் போஸ் BLDC மோட்டார் கொண்டுள்ளது.
16 கிமீ , 21 கிமீ மற்றும் 25 கிமீ வேகம் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. 21 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது 98 கிமீ மட்டும் கிடைக்கும். அதே நேரத்தில் 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது 85 கிமீ மட்டும் கிடைக்கும். லித்தியம் ஐயன் பேட்டரிக்கு மூன்று வருட வாரண்டியும், லெட் ஆசிட் பேட்டரிக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகின்றது.
Bgauss A2 e-scooter Price list
Model
Lead Acid
Lithium Ion
BGauss A2
ரூ.52,499
ரூ.67,999
பிகாஸ் B8 ஸ்கூட்டர் விலை
அடுத்தப்படியாக, பி8 மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 1.9 கிலோ வாட் போஸ் BLDC மோட்டார் கொண்டு லெட் ஆசிட், லித்தியம் ஐயன், எல்ஐ பேட்டரி பெற்றுள்ளது.
பிகாஸ் ஸ்கூட்டரின் பி8 மாடல் 36 கிமீ , 42 கிமீ மற்றும் 50 கிமீ வேகம் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. 36 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது 70 கிமீ (78 கிமீ லெட் ஆசிட்) மட்டும் கிடைக்கும். அதே நேரத்தில் 42 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது 65 கிமீ (69 கிமீ லெட் ஆசிட்) மட்டும் கிடைக்கும். இறுதியாக, 50 கிமீ வேகத்தில் பயணித்தால் 60 கிமீ (68 கிமீ லெட் ஆசிட்) மட்டும்