இந்திய சந்தையில் ரூ.1.69 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ள பெனெல்லி இம்பீரியல் 400 பைக் மாடல் நேரடியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மற்றும் ஜாவா என இரு மாடல்களையும் எதிர்கொள்ள உள்ளது.
1950 ஆம் ஆண்டு இந்நிறுவனம் தயாரித்த பெனெல்லி மோட்டோ பை என்ற பைக்கின் தோற்ற உந்துதலில் ரெட்ரோ ஸ்டைலை கொண்டதாக வந்துள்ள இம்பீரியல் 400 மாடல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா 42, ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக விளங்குகின்றது. சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் வரவுள்ள இந்த மாடலில் முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவத்திலான இன்டிகேட்டர், க்ரோம் பூச்சு பெற்ற ஃபென்டர், ஸ்போக்டூ வீல் உட்பட ட்வீன் பாட் கொண்ட இண்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற உள்ளது.
373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரினை பெற்று வருகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.
இந்தியாவில் பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.1.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களான ஜாவா மாடல் ரூ. 1.64 லட்சம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.54 லட்சம் வரை கிடைக்கின்றது.
இந்த பைக்கிற்கு 3 வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது. கூடுதலாக இரண்டு வருட இலவச சர்வீஸ் வழங்கப்பட உள்ளது.
(விலை எக்ஸ்ஷோரூம்)