பஜாஜ் ஆட்டோவின், ஆஃப் ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் 180F பைக்கில் தற்போது அடிப்படை பாதுகாப்பு அம்சமாக ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 180எஃப் நியான் எடிசன் ஏபிஎஸ் அல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
முந்தைய பல்சர் 180 மாடலுக்கு மாற்றாக புதிய பல்சர் 180எஃப் (Pulsar 180F) மோட்டார் பைக் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டது.
பஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ்
ஏப்ரல் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஏபிஎஸ் பிரேக் தொடர்பான பாதுகாப்பு விதிமுறையை பெறுவதற்காக பல்சர் 180F என பைக்கில் இடம்பெற்றுள்ளது..
புதியதாக நியான் நிறம் சேர்க்கப்பட்டு அரை ஃபேரிங் செய்யப்பட்டதாக படத்தில் உள்ளது. மற்றபடி எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை. இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 17 PS பவர் வெளிப்படுத்துகின்ற 178 சிசி என்ஜின் டார்க் 14.2 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக பல்சர் 180எஃப் மோட்டார் சைக்கிளின் விலை சுமார் 7,800 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு, ரூ. 94,278 (எக்ஸ் ஷோரூம் புனே) ஆகும்.