இந்தியாவின் 125சிசி கம்யூட்டர் சந்தையில் மிகவும் பிரீமியம் மாடலாக வந்துள்ள பஜாஜ் பல்சர் 125 பைக் மிகப்பெரிய கவனத்தை இளைய தலைமுறையினர் மத்தியில் பெற்றுள்ள நிலையில் இந்த மாடலில் கவனிக்கதக்க அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நமது நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற 125சிசி பைக்குகளில் சந்தையின் பெரும்பகுதியை ஹோண்டா சிபி ஷைன் மற்றும் ஹீரோ கிளாமர் பெற்றுள்ள நிலையில், இவற்றுக்கு மிகுந்த சவாலாக பல்ஸர் 125 விளங்குகின்றது. இந்த பிரிவில் சூப்பர் ஸ்பிளென்டர் மற்றும் டிஸ்கவர் 125 மாடல்களும் இடம்பெற்றுள்ளது. மற்ற மாடல்களை விட கூடுதலான கவனத்தை பல்சர் பெறுவதற்கான காரணம் ஸ்போர்ட்டிவ் தோற்றம் மற்றும் பவர்ஃபுல்லான என்ஜின் பெற்றுள்ளது.
பல்சர் 125 என்ஜின்
டிஸ்கவர் மாடலில் இருந்து பல்சர் 125 என்ஜினை பெறவில்லை. மாறாக பல்சர் 150 பைக்கில் உள்ள என்ஜினை பஜாஜ் நிறுவனம் குறைந்த போராக மாற்றி 125சிசி என்ஜினாக குறைத்திருப்பது மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. எனவே, இந்த என்ஜின் மிகுந்த பவருடன் வந்துள்ள 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 12 ஹெச்பி 6,000 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் வரக்கூடும்.
புதிய கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் மாடலை விட கூடுதலான பவரை பல்சர் 125சிசி பெற்றுள்ளது. ஹோண்டா சிபி ஷைன் மாடல் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மற்றவை 4 வேக கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.
பஜாஜ் பல்சர் 125 பைக் மைலேஜ் லிட்டருக்கு 57.5 கிமீ ஆகும். 80-90 கிமீ வேகத்திலும் பெரிய அளவில் வைப்ரேஷன் இல்லாமல் ஸ்மூத் ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
டிசைன்
பல்சர் 150 பைக் மாடலின் நேரடி மாற்றமாக பல்சர் 125 நியான் மற்றும் ஸ்பிளிட் சீட் பல்சர் 125 விளங்குகின்றது. பல்சர் 150 மாடலை விட குறைவான விலையில் பல்சர் ஸ்டைலில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்கியிருப்பது பஜாஜின் தனித்துவமாக விளங்குகின்றது. ஆனால் எதிர்காலத்தில் பல்சர் 150 விற்பனை பாதிக்கப்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை. மேலும் பல்சர் 150 மாடலை விட 1.5 ஹெச்பி மட்டுமே குறைவான பவரை இந்த பைக் வழங்குகின்றது.
பல்சரின் 150சிசி மாடலில் உள்ள சேஸ் முதல் டயர் வரை தனது பாகங்களாக பெற்றுள்ளது. குறிப்பாக பல்சர் 125 பைக்கில் சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. 140 கிலோ எடை கொண்ட இந்த பைக் போட்டியாளர்களை விட அதிக எடை பெற்றிருப்பதுடன் 125சிசி சந்தையில் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் பைக்காக விளங்குகின்றது. எனவே, ஹைவே மற்றும் லாங் டிரைவிற்கு ஏற்ற அனுபவத்தை 125சிசி சந்தையில் இந்த மாடல் வழங்கும்.
பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்படலாம். மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது.. பல்ஸர் 150 பைக்கில் உள்ளதை போன்ற ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற பல்சர் 125 ஒரு புதிய ஹெட்லைட் கவுல் பேனலை கொண்டிருப்பதுடன் புதிய பாடி கிராபிக்ஸ், ஒரே வகையான இருக்கை மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கின்றது.
பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விலை ரூபாய் 69,562 (டிரம் பிரேக்) மற்றும் டிஸ்க் பிரேக் பெற்ற பல்சர் 125 ரூபாய் 72,618 (டிஸ்க் பிரேக்) (எக்ஸ்ஷோரூம் சென்னை) ஆகும். மேலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள பெல்லி பேன் மற்றும் டேங்க் எக்ஸடென்சனை பெற்ற பல்சர் 125 மாடல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விற்பனைக்கு கிடைக்கின்றது. தமிழகத்தில் அடுத்த மாதம் தொடக்க முதல் விற்பனைக்கு கிடைக்கலாம். இதன் விலை ரூ.74,500 ஆக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
(கொடுக்கப்பட்டுள்ள விலை தோராயமான எக்ஸ்ஷோரூம்)
125சிசி சந்தையில் பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டிவ் தன்மை, சிறப்பான செயல்திறன் மிக்க என்ஜின், சராசரியாக லிட்டருக்கு 50 முதல் 55 கிமீ மைலேஜ், ஹைவே ரைடிங்கிற்கு ஏற்ற வகையிலான 5 கியர்களை பெற்ற என்ஜின் போன்றவை மிகப்பெரிய பிளஸ் ஆகும். விலை அதிகம் என்பதனை மறுப்பதற்கில்லை, போட்டியாளர்களை விட ரூ.7,000 விலை அதிகமாக உள்ளது.