இரு பைக்குகளும் ஒன்றை போலவே தோற்ற அமைப்பினை பெற்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் டோமினார் 250 உடன் டோமினார் 400 பைக்கினை ஒப்பீட்டு முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
மாடரன் பவர் க்ரூஸர் மாடலாக வெளியிடப்பட்ட டோமினார் D400 பைக் பஜாஜ் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை பெற தவறிய நிலையில், அதற்கு குறைவான சிசி உடன் ரூ.30,000 வரை விலை குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
என்ஜின்
முதலில் டொமினார் 400 பைக்கின் என்ஜின் 390 டியூக் மாடலில் இருந்து பெற்ற 373.27cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 40hp பவர், 35 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.
டொமினார் 250 மாடலில் உள்ள என்ஜின் 250 டியூக் மாடலில் பெறப்பட்டு ரீடியூன் செய்யப்பட்டு, 248.77cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 27hp பவர், 23.5 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
சஸ்பென்ஷன்
சஸ்பென்ஷனை பொறுத்தவரை, டோமினாரின் டி250 மாடலில் 37 மிமீ விட்டம் பெற்ற யூ.எஸ்.டி டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றதாக 135 மிமீ பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.
அதே நேரத்தில் டோமினாரின் டி400 மாடலில் 43 மிமீ விட்டம் பெற்ற யூ.எஸ்.டி டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றதாக 135 மிமீ பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.
பின்புறத்தில் நைட்ரக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பர் இரண்டிலும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது.
பிரேக் மற்றும் டயர்
டோமினார் 400 மாடலில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், டோமினார் 250 பைக்கில் 300 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் இரு மாடல்களும் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.
சிறிய அளவிலான டயரை டோமினார் 250 பைக்கில் முன்புறத்தில் 100/80-17″ மற்றும் பின்புறத்தில் 130/70-17″ வழங்கப்பட்டுள்ளது.
டோமினார் 400 பைக்கில் முன்புறத்தில் 110/70-17 ரேடியல் டயர் மற்றும் பின்புறத்தில் 150/60-17″ ரேடியல் வழங்கப்பட்டுள்ளது.
D400 பைக்கில் ஆரோ பச்சை மற்றும் வைன் பிளாக் நிறத்திலும், D250 பைக்கில் சிவப்பு மற்றும் வைன் பிளாக்
டோமினார் பைக் விலை ஒப்பீடு
பஜாஜ் டோமினார் 250 – ரூ.1.60 லட்சம்
பஜாஜ் டோமினார் 400 – ரூ.1.91 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் )