மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டர்களில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் ஒன்றாக ஏப்ரிலியா SXR160 இந்திய சந்தையில் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
கடந்த பிப்ரவரி 2020-ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்எஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் அறிமுகம் கோவிட்-19 பரவலால் தாமதமாகி வந்த நிலையில், தற்போது உற்பத்திக்கு செல்ல உள்ளதால் அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக முழு எல்இடி விளக்குகள், உயர்த்தப்பட்ட கைப்பிடி, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோல், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ், 5 ஸ்போக்குகளை பெற்ற 12 அங்குல அலாய் வீல் பெற்றிருக்கும். சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய ஆறு விதமான நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.
160 சிசி என்ஜினை பெற உள்ள எக்ஸ்எஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் மிக சிறப்பான பிரேக்கிங் செயல்திறனை பெற்ற டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கும்.
அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள ஏப்ரிலியா SXR160 ஸ்கூட்டர் விலை ரூ.130 லட்சத்திற்குள் அமைந்திருக்கலாம்.