Categories: Auto News

ஆட்டோ எக்ஸ்போ 2025.., பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ ஜனவரி 17ல் ஆரம்பம்.!

Bharat Mobility expo 2025

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ ஜனவரி 17 முதல் 22 வரை பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதுவரை ஆட்டோ எக்ஸ்போ என அழைக்கப்பட்டு வந்த மோட்டார் கண்காட்சி இனி பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ என்ற பெயரிலே அழைக்கப்பட உள்ளது.

இந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் வாகன நிறுவனங்கள் மட்டுமல்லாமல் கட்டுமானம் சார்ந்த நிறுவனங்களும், பேட்டரி தொடர்பான நுட்பங்களை வழங்கும் நிறுவனங்களும் வழக்கம் போல வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களும், டயர் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்கள், ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் மிதிவண்டி தயாரிப்பாளர்கள், மற்றும் நகரங்களுக்கான விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களில் குறிப்பாக மாருதி சுசூகி, டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார், ஹூண்டாய் இந்தியா, மஹிந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப் பிஎம்டபிள்யூ, சுசூகி மோட்டார்சைக்கிள், டிவிஎஸ் மோட்டார், யமஹா, ஸ்கோடா, போர்ஷே, அசோக் லேலண்ட், பஜாஜ் ஆட்டோ, ஹோண்டா டூ வீலர்ஸ் ஏதெர் எனர்ஜி, ஓலா எலக்ட்ரிக், கியா, வால்வோ ஐஷர்,  வின்ஃபாஸ்ட், BYD, இசுசூ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போ 2025 அட்டவணை:-

  • 17 ஜனவரி, 2025 : ஊடக நாள்
  • 18 ஜனவரி, 2025 : ஊடகம், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் டீலர்கள்
  • 19 முதல் 22 ஜனவரி, 2025 : பொது மக்களுக்கான நாட்கள்
Share
Published by
MR.Durai