பஜாஜ் ஆட்டோவின் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ஆட்டோரிக்ஷா பிரிவுக்கு என பிரத்தியேக கோகோ (Bajaj Gogo) பிராண்டினை அறிமுகம் செய்து P5009, P5012, மற்றும் P7012 என மூன்று வகைகளில் ரூ. 3,26,797 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
P5009, P5012, மற்றும் P7012. வகை பெயருக்கான விளக்கம், ‘P’ என்பது பயணிகளுக்கான வாகனம், ’50’ மற்றும் ’70’ அளவுகளை குறிக்கின்ற நிலையில், ’09’ மற்றும் ’12’ ஆகியவை முறையே 9 kWh மற்றும் 12 kWh பேட்டரி திறனை கொண்டுள்ளது.
கோகோ P5009
ஆரம்ப நிலை பஜாஜ் கோகோ பி5009 ஆட்டோ ரிக்ஷாவில் 9 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 4.5Kw பவர் மற்றும் 36Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 178 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும்.
மேலும், 0-80 % சார்ஜிங் பெற 4.30 மணி நேரம் எடுத்துக் கொள்ளுகின்ற நிலையில் விலை ரூ. 3,26,797 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோகோ P5012
கோகோ பி5012 ஆட்டோ ரிக்ஷாவில் 12kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5.5Kw பவர் மற்றும் 36Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 248 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும். மேலும், 0-80 % சார்ஜிங் பெற 5.30 மணி நேரம் எடுத்துக் கொள்ளுகின்றது.
கோகோ P7012
கோகோ பி7012 மாடலில் 12kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5.5Kw பவர் மற்றும் 36Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 251 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும்.
மேலும், 0-80 % சார்ஜிங் பெற 5.30 மணி நேரம் எடுத்துக் கொள்ளுகின்ற நிலையில் விலை ரூ. 3,83,001 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக மூன்று வகைகளும் Eco, Power, Climb, Park Assist போன்ற மோடுகளுடன் முழுமையான எல்இடி விளக்குகள், இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்கினை பெற்று ரீஜெரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், 120/80 R12 டயருடன் எல்சிடி டிஸ்பிளே உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்ற டெக்பேக் பெற்றுள்ளது.