பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக 5-5-5 சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சலுகையின் படி, பாஜாஜ் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு இலவச டேமேஜ் இன்சூரன்ஸ் கவர், ஐந்து ஆண்டு இலவச சர்விஸ் மற்றும் ஐந்து ஆண்டு இலவச வாராண்டி வழங்க உள்ளது.
இந்த 5-5-5 சலுகை குறித்து பேசிய பாஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பிசினஸ் தலைவர் எரிக் வாஸ், புதிய இன்சூரன்ஸ் விதிமுறைகளால், புதிய மோட்டார் சைக்களில் வாங்குபவர்களுக்கான ஆன் ரோடு விலை 6000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வால் ஏற்படும் கஷ்டத்தை குறைக்கும் நோக்கில், புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு முதல் ஆண்டு டேமேஜ் இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது. இதை மேலும் நான்கு ஆண்டுக்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் முதல் முறையாக 5-5-5 ஸ்கீமை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகை மூலம் பஜாஜ் நிறுவனம் வாடிக்கையாளர்கள் இந்த விழாக்கால சீசனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இந்த இன்சூரன்ஸ் ஸ்கீம் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையாக பல்சர் மாடல்களுக்கு பொருந்தும்
பிளாட்டினா, டிஸ்கவர், புல்சர் 150, பன்சர் என்எஸ் 160 அல்லது வி வகை மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்களுக்கும் இந்த 5 ஆண்டு இன்சூரன்ஸ் வழங்கப்படும். இதுமட்டுமின்றி CT100, பிளாட்டினா, டிஸ்கவர், வி மற்றும் பல்சர்
வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக இரண்டு சர்விஸ்களை இலவசமாக பெறலாம். இதுமட்டுமின்றி எந்த வகையான பஜாஜ் மோட்டார் சைக்கிள்களுக்கும் ஐந்து ஆண்டு இலவச வாராண்டி பேக்கேஜ் கிடைக்கும்.