2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியாக உள்ள இந்தியவிற்கான பிரத்தியேக மாடலான விஷன் இன் எஸ்யூவி கான்செப்ட்டின் மாதிரிப்படங்களை ஸ்கோடா வெளியிட்டுள்ளது. விஷன் இன் கான்செப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வரவுள்ளது.
இந்தியாவிற்கு வோக்ஸ்வேகன் குழுமத்தின் பிரத்தியேகமான MQB A0 IN பிளாட்ஃபாரமில் வடிவமைக்கப்பட உள்ள எஸ்யூவி காராக விஷன் இன் விளங்க உள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற காமிக் எஸ்யூவி காரின் தோற்ற சாயலை பின்னணியாக கொண்டுள்ளது. 4.26 மீட்டர் நீளம் பெற்ற எஸ்யூவி காராக வெளியாக உள்ள விஷன் இன் கான்செப்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகியவை இடம்பெறலாம். டீசல் என்ஜின் குறித்தான தகவல் இல்லை.
ஸ்கோடாவின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் எல்இடி புராஜெக்டர் விளக்குகள், அகலமான பம்பருடன் அதிக இடைவெளி கொண்ட ஏர்டேம் மமற்றும் கிளாடிங் உட்பட நேர்த்தியான டைமன்ட் கட் அலாய் வீல் டிசைன், பின்புறத்தில் எல்இடி டெயில் நேர்த்தியான பம்பர் அமைப்பினை பெற்றுள்ளது.
இன்டிரியர் தொடர்பான விஷன் IN படம் முன்பே டீசர் செய்யப்பட்ட படி, ஃபீரி ஸ்டேண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்டரல் கன்சோலில் உள்ளது. மேலும் பெருவாரியாக சென்டரல் கன்சோல், டேஸ்போர்ட், ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கதவு பேனல்களில் ஆரஞ்சு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெறுகின்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பெற உள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா, செல்டோஸ் போன்ற கார்களை எதிர்கொள்ள உள்ள ஸ்கோடா விஷன் இன் முன்பே குறிப்பிட்டபடி, 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.