எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் முதல் தானியங்கி விமானங்கள் வரை மோட்டார் சார்ந்த துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ள நிலையில் முதல் ஏர்பஸ் தானியங்கி ஹெலிகாப்டர் முதல் பயணம் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்பஸ் தானியங்கி ஹெலிகாப்டர்
ஏர்பஸ் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர்ஸ் குயிம்பால் என இரு நிறுவனங்களில் கூட்டணியல் உருவாகியிருக்கும் முதல் VSR700 உலங்கு தானியங்கி வானூர்தி 7 மாதங்களில் வடிவமைக்கப்பட்டிருமப்பதாக ஏர்பஸ் தெரிவித்துள்ளது.
Optionally Piloted Vehicle (OPV) என அழைக்கப்படுகின்ற தானியங்கி ஹெலிகாப்டரில் பைலட் இல்லாமல் தானாகவே மேலே எழும்புதல், இறங்குவது, பறத்தல் உள்பட சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுகின்ற வகையில் VSR700 ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் கூடுதலாக சோதனையின் பொழுது பாதுகாப்பினை கருதி பைல்ட் ஒருவரும், இதன் செயல்பாட்டை கண்கானித்துள்ளார். மேலும் இந்த ஹெலிகாப்டரின் அதிகபட்ச சுமை தாங்கும் திறன் 250 கிலோவாக உள்ளது. பயன்பாட்டினை பொறுத்து அதிகபட்சமாக தொடர்ந்து 10 மணி நேர ஆகாயத்தில் பறக்கும் திறன் பெற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் மத்தியில் இந்த VSR700 உலங்கு தானியங்கி வானூர்தி மாடலின் முழுமையான ஹெலிகாப்டர் வெளியிடப்பட உள்ளது.