இவற்றில் பெரும்பாலான மாடல்கள் குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வந்தது. எஸ்எஸ் 125 மற்றும் ஒய்பிஆர் 125 போன்ற மாடல்களுக்கு மாற்றாக யமஹா சலுட்டோ 125 விற்பனைக்கு வந்தது.
எஸ்இசட்-ஆர்ஆர் பைக்கிற்க்கு மாற்றாக புதிய எஸ்இசட்-ஆர்ஆர் வெர்சன் 2.0
விற்பனையில் உள்ளது. ஒய்பிஆர் 110 மற்றும் எஸ்இசட்-எஸ் போன்றவை ரொம்ப நாளாக சந்தையில் உள்ளதால் அவற்றின் விற்பனையும் முடித்து கொண்டுள்ளது.
புதிதாக வந்தள்ள யமஹா சல்யூடோ சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் என சந்தையின் தேவைக்கேற்ப இடம்பெற்றள்ளதால் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.
தற்பொழுது யமஹா நிறுவனத்தின் மாடல்கள் யமஹா க்ரூஸ் , சல்யூடோ 125 , SZ-RR V2.0, FZ V1.0, FZ FI V2.0, FZ-S V1.0, FZ-S FI V2.0, ஃபேஸர் 153cc, ஃபேஸர் FI V2.0, YZF-ஆர்15 V2.0 மற்றும் யமஹா ஆர்3.
மேலும் பெர்ஃபாமென்ஸ் ரக சூப்பர் பைக்குகள் FZ1, புதிய YZF ஆர்1 ,ஆர்1எம் மற்றும் விமேக்ஸ் க்ரூஸர் .
மேலும் ஸ்கூட்டர் வகையில் ஃபேசினோ , ஆல்ஃபா , ரே , ரே இசட் போன்றவை விற்பனையில் உள்ளது.
Yamaha discontinues 5 models