அதிகபட்சமாக மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையிலான ஹைப்பர்லூப் நுட்பத்தின் சோதனை ஓட்ட முயற்சியில் தற்போது மணிக்கு 310 கிமீ வேகத்தை ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் எட்டியுள்ளது.
ஹைப்பர்லூப் ஒன்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கீழ் செயல்படும் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தின் முதற்கட்ட சோதனை ஓட்டத்தில் மணிக்கு அதிகபட்சமாக 111 கிமீ வேகத்தை எட்டியிருந்த நிலையில் இரண்டாவது கட்ட சோதனை ஓட்டத்தில் 300 மீட்டர் கொண்ட பாட் 1443 அடி தொலைவினை டிராக்கினை அதிகபட்சமாக 310 கிமீ வேகத்தை எட்டியுள்ளது.
ஹைப்பர்லூப் என்றால் என்ன ?
வெற்றிடக் குழாய்களில் கேப்சூல் வாகனத்தில் பயணிகள் அமர்ந்து அதிவேகமாக பயணம் செய்யும் வகையில் ஐந்தாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து முறையே ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகின்றது.
கேப்சூல் (பாட்ஸ்) எனப்படுவது அவரையின் உள்ளே அமைந்திருக்கும் பட்டாணி விதைகள் போன்ற வாகனமாகும்.
ஹைப்பர்லூப் XP-1 சோதனை ஓட்ட விபரம்
விபரம் | இரண்டாவது கட்டம் | முதற்கட்டம் | வளர்ச்சி |
வேகம் | 310kph | 111kph | 2.7 மடங்கு வேகம் அதிகரிப்பு |
தொலைவு | 1443 அடி | 315 அடி | 4.5 மடங்கு தொலைவு |
ப்ரபல்ஷன் | 300m | 30m | 10 மடங்கு அதிகரிப்பு |
பவர் | 3151hp | 891hp | 3.5 மடங்கு ஆற்றல் அதிகரிப்பு |
இந்தியாவிலும் இது போன்ற ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனம் அடுத்த சில ஆண்டுகளில் ஆரம்பகட்ட பணிகளை அரசு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.