சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே பெற்று 2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் OBD2B இணக்கமான எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.1,19,481 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான மாடலாக தொடர்ந்து யூனிகார்ன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 2025 மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டு கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சர்வீஸ் டூ இண்டிகேட்டர், ஈகோ இண்டிகேட்டர் போன்ற பல தகவல்களைக் காட்டுகிறது. கூடுதலாக, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டைப் பெறுகிறது.
சமீபத்தில் வெளியான எஸ்பி125, எஸ்பி160 மற்றும் ஆக்டிவா 125 போல டிஎஃப்டி கிளஸ்ட்டர் மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறவில்லை.
2025 யூனிகார்ன் மாடலில் HET நுட்பத்துடன் கூடிய OBD2B ஆதரவினை பெற்ற 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13 hp பவர், 14.58 NM டார்க் ஆனது 5,20rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
மற்றபடி, தொடர்ந்து கிரே, சிவப்பு, மற்றும் கருப்பு என மூன்று விதமான நிறங்களை பெற்றுள்ள பைக்கில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமான டிசைன், சஸ்பென்ஷன் உள்ளிட்ட எந்த இடத்திலும் மாற்றங்கள் இல்லை. பிரேக்கிங் முறையில் தொடர்ந்து சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன் டயரில் டிஸ்க் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் உள்ளது.
முந்தைய யூனிகார்ன் 160 மாடலை விட ரூ.8,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2025 Honda Unicorn disc – ₹ 1,19,481
(ex-showroom Delhi)