ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 450S, 450X என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் கூடுதல் வசதிகள், முந்தைய மாடலை விட வேகமான சார்ஜிங் பெற்று ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.58 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக ஹைப்பர் சேன்ட் மற்றும் ஸ்டெல்த் ப்ளூ என இரு நிறங்களை 450 வரிசை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப நிலை 450எஸ் ஸ்டெல்த் ப்ளூ நிறத்தை மட்டும் பெற்றுள்ளது. கூடுதலாக மேஜிக் ட்விஸ்ட் (Low and High), மல்டி மோடு டிராக்ஷன் கண்ட்ரோல் (Rain, Road & Rally) வசதிகளை 450X, Apex 450 மாடல் பெற்றுள்ளது.
2025 Ather 450S
ஆரம்ப நிலை மாடலாக 2.9Kwh பேட்டரி பேக் பெற்ற ஏதெரின் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச பவர் 5.4 kW (7.24 hp) மற்றும் 22Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 0-40 கிமீ வேகத்தை எட்ட 3.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ எட்டுகின்றது.
குறிப்பாக சிங்கள் சார்ஜில் தற்பொழுது 122 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் ஸ்மார்ட் ஈக்கோ மோடில் 100 கிமீ வெளிப்படுத்தலாம். குறிப்பாக இந்த மாடலில் ஸ்மார்ட் ஈக்கோ, ஈக்கோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் என 4 விதமாக வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை விட குறைவான நேரத்தில் சார்ஜிங் ஏறும் வகையில் தற்பொழுது 375W சார்ஜர் கொடுக்கப்பட்டு 0-80% பெற 5.30 மணி நேரமும், 0-100 % எட்ட 7.45 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். கூடுதலாக விரைவு சார்ஜர் ஆப்ஷன் மூலம் 1.5 கிமீ ஏறுவதுறக்கு 1 நிமிடம் மட்டும் போதுமானதாகும்.
2025 Ather 450X
2.9Kwh பேட்டரி பேக் பெற்ற 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச பவர் 6.4 kW (8.24 hp) மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 0-40 கிமீ வேகத்தை எட்ட 3.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ எட்டுகின்றது.
முழுமையான சார்ஜில் தற்பொழுது 126 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் ஸ்மார்ட் ஈக்கோ மோடில் 100 கிமீ வெளிப்படுத்தலாம். குறிப்பாக இந்த மாடலில் ஸ்மார்ட் ஈக்கோ, ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப் என 5 விதமாக வழங்கப்பட்டுள்ளது.
450எக்ஸ் மாடலின் குறைந்த பேட்டரி திறன் பெற்ற 700W சார்ஜர் கொடுக்கப்பட்டு 0-80% பெற 3 மணி நேரமும், 0-100 % எட்ட 4.30 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
டாப் வேரியண்டில் 3.7Kwh பேட்டரி பேக் பெற்ற 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச பவர் 6.4 kW (8.24 hp) மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 0-40 கிமீ வேகத்தை எட்ட 3.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ எட்டுகின்றது.
சிங்கிள் சார்ஜில் தற்பொழுது 161 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் ஸ்மார்ட் ஈக்கோ மோடில் 125 கிமீ வெளிப்படுத்தலாம். குறிப்பாக இந்த மாடலில் ஸ்மார்ட் ஈக்கோ, ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப் என 5 விதமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாடலின் 0-80% பெற 4.30 மணி நேரமும், 0-100 % எட்ட 5.45 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
- Ather 450S 2.9Kwh – ₹ 1,31,312
- Ather 450X 2.9Kwh – ₹ 1,48,312
- Ather 450X 3.7Kwh – ₹ 1,58,312
- Ather 450 Apex 3.7Kwh – ₹ 2,01,311
(Ex-showroom TamilNadu)
கூடுதலாக ஏதெர் புரோ பேக் பெற கட்டணம் வேரியண்ட் வாரியாக ரூ.14,001 முதல் ரூ.20,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.