கிரெட்டா எஸ்யூவி மாடலுக்கு கீழாக கொண்டு வரப்பட்டுள்ள ஹூண்டாய் பையான் (Hyundai Bayon) கிராஸ்ஓவர் எஸ்யூவி காரை ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஐ20 அடிப்படையிலான எஸ்யூவி கார் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
‘Bye-Onn’ என்ற உச்சரிக்கும் வகையில் ஹூண்டாய் உருவாக்கியுள்ள பெயர் பிரான்சில் அமைந்துள்ள Bayonne ஒரு நகரத்தின் பெயரை அடிப்படையாக கொண்டதாகும்.
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற பல்வேறு கிராஸ்ஓவர் கார்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பையான் எஸ்யூவி காரில் 84 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 100 ஹெச்பி அல்லது 120 ஹெச்பி என இருவகையான பவர் ஆப்ஷனில் தேர்வு செய்யும் வகையில் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட உள்ளது. இதில் 6 வேக iMT அல்லது டிசிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
ஹூண்டாயின் வழக்கமான கிரில் அமைப்பினை கொண்டு எல்இடி டி.ஆர்.எல் மற்றும் ஹெட்லைட் என இரண்டு பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு அமைப்பில் நேரத்தியான அலாய் வீல், மேற்கூறை அமைப்பின் சி பில்லர் பகுதி சிறப்பான கவனத்தை பெறுகின்றது.
ஐ20 காரின் இன்டிரியர் அமைப்பினை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள பையான் காரில் 10.25 டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்கட்டிவிட்டி வதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அல்கசார் எஸ்யூவி, ஐ20 N என இரு மாடல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதால் பையான் வருகை தற்போதைக்கு சாத்தியமில்லை.