இந்தியாவின் மிக நம்பிக்கையான பிராண்டு மதிப்பினை பெற்ற நிறுவனம் என்றால் அதில் டொயோட்டா நிறுவனமும் ஒன்றாகும். இந்தியாவில் டொயோட்டா வயோஸ் என்ற நடுரக செடான் காரினை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
டொயோட்டா வயோஸ்
பல வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள வயோஸ் செடான் கார் கரோல்லா அல்டிஸ் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா காருக்கு நிகரான சொகுசு மற்றும் தரத்தினை கொண்டிருக்கும்.
தோற்றம்
கரோல்லா அல்டிஸ் போன்ற முகப்பினை கொண்ட வயோஸ் காரின் முகப்பில் பட்டையான நீளவாக்கில் கொடுக்கப்பட்டுள்ள குரோம் பூச்சு ஸ்லாட் கரோல்லா அல்டிஸ் போன்ற தோற்றத்தினை நினைவுப்படுத்துகின்றது. பக்கவாட்டிலும் பின்புறத்திலும் நேர்த்தியான தோற்றத்தினை கொண்டுள்ளது.
இன்டிரியர்
அல்டிஸ் காரின் இன்டிரியரை பெரும்பங்கு கொண்டிருக்கும். மேலும் ஆடியோ அமைப்பு , பல நவீன வசதிகளை கூடுதலாக இணைக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும்.
என்ஜின்
எட்டியோஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் கரோல்லா அல்டிஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள 1.4 லிட்டர் டி-4டி டீசல் என்ஜினும் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
சொகுசு மற்றும் விலை
டொயோட்டா கார்களில் எப்பொழுது தரத்திறக்கு பாதுகாப்பிற்க்கும் குறை இருக்காது என்பதனால் மிகுந்த வரவேற்பினை வயோஸ் பெற வாய்ப்புகள் உள்ளது. வயோஸ் நடுரக செடான் கார் இன்னோவா மற்றும் அல்டிஸ்க்கு நிகரான சொகுசு தன்மையை கொண்டிருக்கும். எட்டியோஸ் மற்றும் கரோல்லா அல்டிஸ் காருக்கு இடையில் நிறுத்தப்பட இருக்கும்
வயோஸ் கார் விலை ரூ.8 லட்சம் முதல் 12 இலட்சத்திற்க்குள் இருக்கும். டொயோட்டா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக புதிதாக டொயோட்டா வயோஸ் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி , மாருதி சியாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும். இந்தியாவிலே உற்பத்தி செய்ய டொயோட்டா திட்டமிட்டு வரும் நிலையில் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் கிடைக்க தொடங்கலாம்.