இந்தியாவில் குறைந்த விலை பெர்ஃபாமென்ஸ் ரக செடான் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ் காரின் முதல் பேட்ஜில் 250 கார்களை விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டாவியா ஆர்எஸ் கார் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக செடான் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ் கார் விலை ரூ.24.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) என வெளியிடப்பட்டிருந்த நிலையில் முதல் பேட்ஜில் ஒதுக்கப்பட்டிருந்த 250 கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த அக்டாவியா ஆர்எஸ் விற்பனை 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
புதிய டர்போ-சார்ஜ்டு 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 230hp பவரை வெளிப்படுத்துவதுடன் 350Nm டார்க்கினை வழங்குகின்றது. முன்புற சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.