இந்திய சந்தையில் ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே பிராண்டு வெளியேறுவதாக கிளம்பிய வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் 2017 செவர்லே பீட் கார் ஜூலை மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளதை உறுதி செய்யும் வகையிலான டீலர் மெமோ தகவல்கள் வெளியாகியுள்ளது.
2017 செவர்லே பீட்
- 2017 செவர்லே பீட் கார் எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
- புதிய பீட் கார் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெற்ற காராக வலம் வரவுள்ளது.
- 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளிப்படுத்தப்பட்ட மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.
பெட்ரோல் பீட் காரில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 79 bhp பவருடன், 107 Nm டார்க் வெளிப்படுத்தும். டீசல் பீட் காரில் 1.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 58.5 bhp மற்றும் 149 Nm டார்க் வெளிப்படுத்தும். இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதுதவிர ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.
புதுப்பிக்கப்பட்ட டிசைன் அம்சங்களை பெற்ற மாடலாக வரவுள்ள இந்த காரின் முகப்பில் கிரில் தோற்ற அமைப்பை புதிதாக மேம்படுத்தப்பட்டிருக்கும். பக்கவாட்டில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல் பின்புற பம்பர் அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டதாக இருக்கும்.
இன்டிரியர் அமைப்பில் இருவண்ண கலவையிலான டேஸ்போர்டு அமைப்புடன் செவர்லே மைலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளை பெற்றதாக இருக்கும்.
முன்பக்கத்தில் இருகாற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தர அம்சமாக இணைக்கப்படலாம் அல்லது பேஸ் வேரியன்ட் தவிர்த்து மற்ற வேரியன்ட்களில் இடம்பெற்றிருக்கும்.
வருகின்ற ஜூன் மாதம் மத்தியில் இந்திய சந்தையில் புதிய செவர்லே பீட் விற்பனைக்கு வருவது உறுதி செய்யும் வகையிலான தகவல்கள் டீலர்களுக்கு ஜிஎம் அனுப்பியுள்ள அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது. எனவே இந்திய சந்தையிலிருந்து ஜிஎம் வெளியேறும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.