2013 கேடிஎம் ட்யூக் 390 பைக் வருகைக்கு பின்னர் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட 2017 கேடிஎம் ட்யூக் 390 பைக் ரூ. 2.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ள 390 ட்யூக் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள் என்ன என பார்க்கலாம்.
கேடிஎம் ட்யூக் 390 பைக்
விற்பனையிலிருந்த மாடலை விட முற்றிலும் மேம்பட்ட பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்டதாக விளங்குகின்ற புதிய ட்யூக் 390 பைக்கில் 44bhp (34KW) பவரை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 35 NM வெளிப்படுத்தும். இதில் சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் இணைந்த 6 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.
- 1290 சூப்பர் ட்யூக் பைக்கின் வடிவத்தை சார்ந்த அம்சங்களை பெற்றதாக வந்துள்ள 390 ட்யூக் பைக்கின் டிசைன் ஆக்ரோஷமாக இரட்டை பிரிவுகொண்ட முன்பக்க முழு எல்இடி விளக்குகளின் வாயிலாக வெளிப்படுத்துகின்றது.
- முந்தைய மாடலை விட சுமார் 2.4 லிட்டர் கூடுலலான கொள்ளளவு பெற்று 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் மிகவும் ஸ்டைலிசான டிசைன் அம்சத்துடன் அட்டகாசமாக பொரிக்கப்பட்டுள்ள 390 பாடி ஸ்டிக்கரிங்கை பெற்றுள்ளது.
- முகப்பில் அமைந்துள்ள இரட்டை பிரிவு எல்இடி ஹெட்லைட்டில் 20 எல்இடி பல்புகளை பெற்றுள்ளது.
- பெட்ரோல் டேங்கில் உள்ள எரிபொருள் ஆவியடையாமல் தடுக்கும் வகையிலான EVAP சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் சூரிய வெப்பத்தினால் விரயமாகுவதனை 3% முதல் 5 % வரை தடுக்கின்றது.
- முந்தைய மாடலை விட 10 கிலோ எடை அதிகரித்து 149 கிலோ எடை கொண்டதாக வந்துள்ளது.
- புதிய டிஎஃப்டி இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு விதமான சிறப்பு அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது.
- கொடுக்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரின் கேடிஎம் மைரைட் வாயிலாக உங்கள் ஸ்மார்ட்போனை இணைத்து பாடல்களை தேர்வு செய்வது அழைப்புகளை ஏற்பது உள்பட பல தகவல்களை பெறலாம்.
- சுவிட்சபிள் ஏபிஎஸ் பயன்படுத்தப்பட்டு 3 விதமான மோட்களை கொண்டுள்ளது. அவை ஆஃப் , ரோடு மற்றும் சூப்பர் மோட்டோ போன்றவை ஆகும்.
- இரு விதமான மோட்களை பெற்றுள்ள கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் ரோடு மற்றும் சூப்பர் மோட்டோ மோடுகள் இடம்பெற்றுள்ளன.
- ரைட் பை வயர் , சிலிப்பர் கிளட்ச் , அட்ஜெஸ்டெபிள் பிரேக் லிவர் , அப் சைடு டவுன் ஃபோர்க்குகள் , மோனோ ஷாக் அப்சார்பர் உள்பட பல வசதிகளை பெற்றுள்ளது.
முந்தைய மாடலை விட சுமார் ரூ.29,000 வரை அதிகரிக்கப்பட்டு 2017 கேடிஎம் ட்யூக் 390 பைக் விலை ரூ. 2.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.