வருகின்ற மார்ச் 26 ந் தேதி தொடங்க உள்ள 2017 ஃபார்முலா 1 கார் பந்தய போட்டிக்கான கால அட்டவனை இணைக்கப்பட்டுள்ளது. புதிய நுட்ப விதிகளுடன் 2017 எஃப் 1 பந்தயம் தொடங்க உள்ளது.
2017 ஃபார்முலா 1
- மார்ச் 26ந் தேதி ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் முதல் போட்டி தொடங்குகின்றது.
- 21வது சுற்று இறுதி போட்டி நவம்பர் 26ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது.
- 10 ரேஸ் அணிகள் ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்க உள்ளன.
பங்கேற்க உள்ள அணிகளின் விபரம்
- மெர்சிடிஸ் W08
2016 ஆம் ஆண்டின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மெர்சிடிஸ் அணியின் சார்பில் பங்கேற்க உள்ள வீரர்கள் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெர்ரி போட்டஸ் ஆகும். 111 முறை போடியம் ஏறியுள்ள மெர்சிடஸ் அணி மூன்று முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
- வில்லியம்ஸ் FW40
வில்லியம்ஸ் அணியின் சார்பாக பெலிப்பெ மாஸா மற்றும் ரூக்கீ லான்ஸ் ஸ்ட்ரால் பங்கேற்கின்றனர். 2017 சாம்பியன்ஷிப் பந்தயத்தில் மெர்சிடஸ் என்ஜினுடன் பங்கேற்கின்ற வில்லியம்ஸ் அணி இதுவரை 310 முறை போடியம் ஏறியுள்ள இந்த அணி 9 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- சாபர் C36
சாபர் C36 அனியின் சார்பாக பங்கேற்க உள்ள வீரர்கள் மார்கஸ் எரிக்சன் மற்றும் பாஸ்கல் வெக்ரிலியன் ஆகும். இந்த அணி 2016 ஆம் ஆண்டில் ஃபெராரி பயன்படுத்திய என்ஜினை இந்த வருடம் சாபர் பயன்படுத்துகின்றது. இதுவரை 27 முறை போடியத்தை நிறைவு செய்துள்ளது.
- ரெனால்ட் FS17
ரெனால்ட் ஸ்போர்ட் ஃபாரமுலா 1 அணியின் சார்பாக நிகோ ஹல்கன்பெர்க் மற்றும் ஜாலியன் பால்மர் பங்கேற்கின்றனர். ரெனால்ட் அணி இதுவரை 59 முறை போடியம் ஏறியுள்ள இந்த அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
-
ஃபோர்ஸ் இந்தியா VJM10
சஹாரா ஃபோர்ஸ் இந்தியா அணியின் சார்பாக செர்ஜியோ பெரெஸ் மற்றும் எஸ்டாபென் ஒசான் பங்கேற்க உள்ளனர். மெர்சிடஸ் நிறுவன என்ஜினை பெற்றிருக்கும். கடந்த முறை 4வது இடத்தை கைபற்றிய விஜய் மல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா இதுவரை 5 முறை போடியத்தை நிறைவு செய்துள்ளது.
- ஃபெராரி SF70H
70வது பிறந்த வருடத்தை கொண்டாடும் ஃபெராரி நிறுவனத்தின் சார்பாக செபாஸ்டியன் வெட்டல் மற்றும் கிமி ரெய்க்கனென் பங்கேறக்க உள்ளனர். மற்ற எந்த அணிகளையும் போல அல்லாமல் 719 முறை போடியத்தை நிறைவு செய்து 16 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- மெக்லாரன் MCL 32
மெக்லாரன் ஹோண்டா சார்பாக ஃபெர்ணாண்டோ அலோன்சோ மற்றும் ஸ்டோஃபெல் வான்டூரேன் பங்கேறக்க உள்ளனர். ஹோண்டா நிறுவன என்ஜினை களமிறங்க உள்ள மெக்லாரன் இதுவரை 135 முறை போடியத்தை நிறைவு செய்து 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- ரெட் புல் RB13
ரெட் புல் ஃபார்முலா 1 அணியின் சார்பாக டேனியல் ரிக்கிர்டோ மற்றும் மேக்ஸ் வெர்ஸ்டெபன்
பங்கேறக்க உள்ளனர். TAG Heuer பேட்ஜ் பெற்ற ரெனோ என்ஜினுடன் களமிறங்க உள்ள ரெட்புல் அணி இதுவரை 485 முறை போடியத்தை நிறைவு செய்து 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- ஹாஸ் VF-17
ஹாஸ் எஃப்1 அணியின் சார்பாக ரோமெய்ன் ரோஸ்ஜீன் மற்றும் கெவின் மேக்னசம் பங்கேறக்க உள்ளனர். ரெனோ என்ஜினுடன் களமிறங்க உள்ளது.
- டோரா ரோசா STR12
டோரா ரோசா சார்பாக டேனியல் கைவியாட் மற்றும் கார்லோஸ் சானிஸ் ஜூனியர் பங்கேறக்க உள்ளனர். ரெனோ என்ஜினுடன் களமிறங்க உள்ள டோரா ரோசா அணி இதுவரை 1 முறை போடியத்தை நிறைவு செய்துள்ளது.
2017 F1 பந்தய காலண்டர் முழுவிபரம்