2016 ஹோண்டா அக்கார்டு கார் |
புதிய அக்கார்டு காரின் வெளிதோற்றம் மற்றும் உட்புறத்தில் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.
தோற்றம்
அக்கார்டு தோற்றத்தில் முன் மற்றும் பின் பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முகப்பில் டாப் வேரியண்டில் புதிய எல்இடி முகப்பு விளக்கு மற்ற வேரியண்ட்களில் சாதரன விளக்குகளுடன் பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி பனி விளக்குகளை பெற்றுள்ளது.
பக்கவாட்டில் நேர்த்தியான வளைவுகளை பெற்றுள்ளது. 19 இஞ்ச் ஆலாய் வீலை பெற்றுள்ளது.
பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான அகலமான குரோம் பட்டை முன் மற்றும் பின் பக்கங்களில் பெற்றுள்ளது.
உட்புறம்
நவீன காலத்திற்க்கு ஈடுகொடுக்கும் வகையில் பல புதிய வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 7 இஞ்ச் (மற்ற வேரியண்ட் ) தொடுதிரை அமைப்பு மற்றும் டாப் வேரியண்டில் 7.7 இஞ்ச் தொடடுதிரை அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆப்பினை பெற்றுள்ளது.
முந்தைய ட்வீன் ஸ்கிரின் சென்ட்ர்ல் கன்சோல் , ஏசி கன்ட்ரோல் யூனிட் போன்றவற்றில் மாற்றங்கள் இல்லை. பிளாக் ஃபினிஷ் கொண்டுள்ளது.
என்ஜின்
ஹோண்டா அக்கார்டு காரில் 2.4 லிட்டர் மற்றும் 3.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக சிவிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்
புதிய அக்கார்டு காரில் ரியர் வியூ கேமரா அனைத்து வேரியண்டிலும் இருக்கும். மேலும் கூடுதல் ஹைபீம் முகப்பு விளக்குகள் , லேன் கீப் உதவி , லேன் வார்னிங் , அடாப்ட்டிவ் க்ரூஸ் கட்டுப்பாடு , மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர் , முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகள் டாப் வேரியண்டில் இருக்கும்.
2016 ஹோண்டா அக்கார்டு கார் |
ஹோண்டா அக்கார்டு காரினை மேம்படுத்தப்பட்ட ஹைபிரிட் மாடலும் வரவுள்ளது. அமெரிக்காவின் ஹோண்டா அக்கார்டு மாடல் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஹோண்டா அக்கார்டு மாடல் சில மாறுதல்களை பெற்றிருக்கும்.
2016 Honda Accord Facelift details revealed