2016 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களிலே 20,000க்கு மேற்பட்ட முன்பதிவினை புதிய இன்னோவா கார் பெற்றுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு முற்றிலும் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வந்திருக்கின்றது.
கடந்த சில வாரங்களிலே புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா கார் 20000 முன்பதிவுகளை பெற்று 4 மாதம் வரையில் காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது. மேலுப் டாப் வேரியண்ட் ZX ஆட்டோமேட்டிக் மாடலுக்கு அதிக வரவேற்பு உள்ளது. டொயோட்டா பிடாடி ஆலையில் மாதம் 7000 கார்கள் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது.
டொயோட்டாவின் புதிய ஜிடி வரிசை 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் என இருவிதமான டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மெனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாகசினை பெற்றுள்ளது. முந்தைய மாடலின் காரை விட ரூ.4.25 லட்சம் கூடுதலான விலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
உறுதியான கட்டுமான , பாதுகாப்பு வசதிகள் , தரம் போன்றவற்றில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாத டொயோட்டா நிறுவனத்தின் மீது இந்திய மக்களுக்கு தனிமரியாதை உள்ளதை நிருபிக்கும் வகையில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
15000 முன்பதிவுகளை பெற்றுள்ள க்ரீஸ்ட்டா காரில் 60 சதவீதம் 2.8 லிட்டர் என்ஜின் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்
174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும்.
மேலும் முழுமையாக படிங்க ; இன்னோவா க்ரிஸ்டா கார் விலை விபரம்
இன்னோவா க்ரீஸ்டா பெட்ரோல் கார் வருகை
[envira-gallery id=”7252″]