ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதால் ரேஞ்ச் ரோவர் எவோக் காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
![]() |
ரேஞ்ச்ரோவர் எவோக் |
மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் எவோக் காரில் தோற்றத்தில் சில மாற்றங்களுடன் , புதிய அலாய் வில் . எல்இடி விளக்குகள் , போன்றவற்றை பெற்றுள்ளது.
உட்புறத்திலும் புதிய 8 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , புதிய இருக்கைகள் , வண்ணங்கள் , அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவை புதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்திய ரேஞ்ச்ரோவர் எவோக் காரில் ஹெட்அப் டிஸ்பிளே , 17 ஸ்பீக்கர்களை கொண்ட 825வாட் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் , பின் இருக்கை பொழுதுபோக்கு அம்சங்கள் , தானாக திறக்கும் டெயில் கேட் மற்றும் வாகனத்தை சுற்றி கான்பிக்கும் கேமராவை பெற்றிருக்கும்.
மேலும் படிக்க ; புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் பற்றி படிக்க
அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ள ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவிலே ஒருங்கினைக்கப்பட உள்ளதால் சவாலான விலையில் வரவுள்ளது.
2016 Range Rover Evoque bookings open