ஆடி நிறுவனம் 2013 ஆர்எஸ் 5 கூபே காரை ரூ.95.28 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய ஆடி ஆர்எஸ்5 காரில் எவ்விதமான என்ஜின் மாற்றங்களும் இல்லை ஆனால் வடிவமைப்பில் சில மாற்றங்களும் கூடுதல் வசதிகளையும் 2013 ஆர்எஸ் 5 கொண்டுள்ளது.
முழுமையாக கட்டமைக்கப்படு இறக்குமதி செய்யப்படும் ஆர்எஸ் 5 கூபே காரில் உள்ள மாற்றங்கள் முகப்பு கிரில் , புதிய வடிவத்தில் பானட், முன் மற்றும் பின்புற பம்பர்கள், எல்இடி டெயில் விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் விளக்குகள், நேவிகேஷன் அமைப்பு, ஐ பாட் தொடர்பு, மிக சிறப்பான ஸ்போர்டிவ் சஸ்பன்ஷன் போன்றவைகள் அடங்கும்.
4.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 444பிஎச்பி மற்றும் டார்க் 430என்எம் ஆகும்.7 வேக எஸ்-ட்ரானிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
0-100 கிமீ வேகத்தினை 4.6 விநாடிகளில் எட்டிவிடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 280கிமீ ஆகும்.
2013 ஆர்எஸ் 5 காரின் விலை ரூ. ரூ.95.28 லட்சம் (மும்பை )