இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ள உலகதரத்திலான டாடா டி1 பிரைமா டிரக் அதிகபட்சமாக 1000 bhp பவரை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த டிரக் மாடலாகும்.
பிரைமா ரேசிங் டிரக்
- இந்தியாவின் முதல் 1040 hp டிரக் மாடலாகும்.
- சர்வதேச ரேஸ் டிரக்குகளுடன் போட்டி போடும் இந்திய டிரக் பிரைமா ஆகும்.
- 0 முதல் 160 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 10 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
- புதிய ZF 16 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
வருகின்ற மார்ச் 19ந் தேதி டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ள T1 பிரைமா டிரக் பந்தயம் சீசன் 4ல் பங்கேற்க உள்ள இந்த பவர்ஃபுல்லான டிரக்கில் இடம்பெற்றுள்ள 12 லிட்டர் ISGe கும்மீன்ஸ் என்ஜின் அதிகபட்சமாக 1040 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 3500 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.
இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல இசட்எஃப் 16 வேக கியர்பாக்சினை பெற்று விளங்குகின்ற இந்த ரேசிங் டிரக் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 10 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
முதன்முறையாக சீசன் 4ல் ஐரோப்பாவின் டிரக் ரேசிங் பந்தயங்களில் பங்கேற்கின்ற போட்டியாளர்களுடன் பிரைமா டிரக் களமிறங்குகின்றது. இந்த போட்டியை Madras Motor Sports Club (MMSC) மற்றும் FIA (பெடரேஷன் இன்டர்னேஷனல் de l ‘ஆட்டோமொபைல்) மற்றும் இந்திய மோட்டார் விளையாட்டு கிளப் (FMSCI) இணைந்து ஒருங்கினைக்கின்றது.