தேசிய குற்ற பதிவு பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
1. 2014ம் வருடத்தில் 1.41 லட்சம் பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
2. மொத்தம் ஏற்பட்ட விபத்துக்கள் 4.5 லட்சமாகும்.
3. காயமடைந்தோர் எண்ணிக்கை 4.81 லட்சத்திற்க்கு மேலாகும்.
4. 5 முன்னனி மாநிலங்கள் உத்திரப்பிரதேசம் , தமிழ்நாடு . மஹாராஷ்டிரா , கர்நாடகா மற்றும் ராஜஸ்தான். இந்த 5 மாநிலங்களின் பங்கு மொத்த விபத்தில் 40 % ஆகும்.
5. உத்திரப்பிரதேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,284 மற்றும். தமிழகத்தில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 ஆகும்.
6. அதிக உயிரிழந்தோர் முன்னனி நகரங்கள் டெல்லி , சென்னை , போபால் மற்றும் ஜெயப்பூர்
7. கவனக்குறைவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49,000 ஆகும்.
8. முந்துவதனால் (ஓவர்டேக்கிங்) உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,000 ஆகும்.
9. அதிக விபத்து இருசக்கரம் மற்றும் லாரிகளால் ஏற்படுகின்றதாம்.
10. 6 விபத்துகளில் 1 விபத்து குடியிருப்பு பகுதியிலும் , மொத்த விபத்தில் 5.43 % விபத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகாமையிலும் ஏற்ப்பட்டுள்ளது.
1 மணி நேரத்திற்க்கு 16 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்
மேலும் வாசிக்க; பைக் ஓட்டத்தெரியுமா ?
விபத்திற்க்கு காரணம்
கவனக்குறைவு , மது , அதிவேகம் , பயற்சியற்ற ஓட்டுநர்கள் போன்றவை முக்கியமான காரணம் என தேசிய குற்ற பதிவு பீரோ தெரிவித்துள்ளது.
Road Accident report in India – 2014