ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இதற்க்காக முயற்சி செய்து வருகின்றது . வருகிற 2013 மார்ச் ஜெனிவா மோட்டார் ஷோவில் 111 கீமி தரக்கூடிய எக்ஸ்எல்1 ஹைபிரிட் காரை காட்சி வைக்க உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. இதன் கார்பன் அளவு 21g/kg வெளிப்படுத்தும். மேலும் பல தகவல்களை படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
ஃபோக்ஸ்வேகன் XL1 ஹைபிரிட் காரில் 800 சிசி TDI டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் இதன் சிலிண்டர் எண்ணிக்கை 2 ஆகும். இதன் சக்தி 47 BHP வெளிபப்டுத்தும். இதனுடன் 27BHP வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டாரும் இனைக்கப்பட்டிருக்கும். 7 ஸ்பீடு டிவல் க்ளட்ச் DSG ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்படும். மின்சாரத்தை சேமிக்க ப்ளக்-இன் ஹைபிரிட் பேட்டரி பயன்படுத்தபடும்.
12.7 விநாடிகளில் 0-100km/hr தொடும். இதன் உச்சக்கட்ட வேகம் 160km/hr ஆகும்.
ஃபோக்ஸ்வேகன் XL1 கார் கார்பன் ஃபைபர் பாடியால் உருவாக்கப்படும். 2 இருக்கைகள் மட்டும் கொண்ட கார் ஆகும். இதன் எடை 795 கீலோகிராம் இருக்கும். இதன் நீளம் 3.8 மீட்டர் உயரம் 1.15 மீட்டர் மற்றும் அகலம் 1.66 மீட்டர்.
49.8 கீமி வேகத்தில்தான் பேட்டரியில் இயங்கும். இதில் 10 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் கலன் பயனபடுத்தியுள்ளனர்.