ஆட்டோமொபைல் தமிழன் வாசகர் நண்பர் முருகானந்தம் அவர் கேட்ட கேள்விக்கு பதிலை தரும் வகையில் இந்த செய்தி தொகுப்பு
அவருடைய கேள்வி
சிபி டிவிஸ்ட்டர் பற்றி அவர் கேட்டுள்ளார். ஆனால் சிபி டிவிஸ்ட்டர் சந்தையை விட்டு விரைவில் வெளியேற உள்ளது. கடந்த ஜூன் மாதம் மிக மோசமாக வெறும் 10 பைக்குகளை மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
டிவிஸ்ட்டர் பைக்கிற்க்கு மாற்றாக ஹோண்டா களமிறக்கியுள்ள புதிய பைக்தான் ஹோண்டா லிவோ ஆகும்.
டிவிஸ்ட்டர் பைக் அறிமுகத்தின் பொழுது நல்ல வரவேற்ப்பினை பெற்றாலும் சில முக்கிய குறைகளால் வாடிக்கையாளர்களால் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டது.
நல்ல ஸ்டைல் , சிறப்பான மைலேஜ் ஆப்ஷன் இருந்தும் ஆற்றல் குறைபாடு , அகலமான டயர் மற்றும் உதறல் போன்ற காரணங்களால் தோல்வி அடைந்தது.
மேலும் வாசிக்க ; ஹோண்டா லிவோ அறிமுகம்
டிவிஸ்ட்டருக்கு மாற்றாக அந்த இடத்தினை நிரப்பும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட லிவோ பைக்கில் எச்இடி நுட்பத்துடன் கூடிய 8.36பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 74கிமீ தரும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.
நல்ல ஸ்டைலான தோற்றத்தில் விளங்கும் லிவோ பைக்கில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷன் உள்ளது. விலை சற்று கூடுதலாக உள்ளது.
ஹோண்டா லிவோ பைக் ஆன் ரோடு விலை சென்னை
ஹோண்டா லிவோ ட்ரம் – ரூ.62,240
ஹோண்டா லிவோ டிஸ்க் – ரூ.64,968
காத்திருங்கள் முழுமையான லிவோ பைக் பற்றிய விவரங்களுக்கு முடிந்தவரை டிவிஸ்ட்டரை தவிருங்கள்.
உங்கள் சந்தேகங்களுக்கு அனுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி ; rayadurai@automobiletamilan.com
Automobile Tamil Q&A