புதிய சிட்டி காரானது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டிலும் ஐனவரி 2014யில் விற்பனைக்கு வந்தது. முந்தைய தலைமுறை வரை பெட்ரோலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட சிட்டி கார் முதல்முறையாக டீசல் மாடலில் விற்பனைக்கு வந்தது.
டீசல் என்ஜின் அறிமுகத்திற்க்கு பின்னர் ஹோண்டா நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் பல சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த வகையில் சிட்டி காரின் பிராண்டின் மதிப்பு டீசல் என்ஜினுடன் இணைந்ததால் மிக எளிதாக 1 இலட்சம் கார்களை விற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில் (2014-2015) ஹோண்டா நிறுவனம் மொத்தம் 1,89,062 கார்களை விற்பனை செய்துள்ளது . இதன் மூலம் முந்தைய நிதி ஆண்டைவிட (2013-2014 யில் 1,34,339 கார்கள்) 41 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மட்டும் 9,777 சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விரைவில் ஹோண்டா ஜாஸ் கார் மீண்டும் விற்பைக்கு வருகின்றது.