இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் தங்களுடைய கார் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டு வரும் நோக்கில் மிக தீவரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
மாருதி , மஹிந்திரா ,டாடா ,ரெனோ என பெரும்பாலான இந்திய கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ள நிலையில் ஹூண்யாய் நிறுவனம் ஏஎம்டி மாடல்கள் பற்றி எந்த தகவலும் வெளியிடாமல் இருந்து வரும் நிலையில் மற்ற நிறுவனங்களை போல ஏஎம்டி கியர்பாக்ஸ் தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக கியர்பாக்சினை பெறாமல் ஹூண்டாய் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பில் ஏஎம்டி கியர்பாக்சினை உருவாக்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனத்தின் தொடக்கநிலை மாடல்களான இயான் , கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 , எக்ஸ்சென்ட் போன்ற தாடல்களில் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர 2018 ஆம்ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் சான்ட்ரோ காரிலும் இடம்பெற உள்ளது. அனேகமாக ஹூண்டாய் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல்கள் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.