எலைட் ஐ20 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஐ20 ஆக்டிவ் புளூயிடிக் 2.0 டிசைன் பரினாமத்தில் ஜெர்மனி ஹூண்டாய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
எலைட் ஐ20 காரை போல தோற்றத்தில் இருந்தாலும் முகப்பு மற்றும் பின்புற பம்பர்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். மேலும் புதிய முகப்பு விளக்குகள் , பகல் நேர விளக்குகள், வட்ட வடிவ பனி விளக்குகள் போன்றவை புதிதாக இருக்கும்.
பாடி கிளாடிங், ஸ்கிட் பிளேட், புதிய ஆலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஐ20 காரை விட கூடுதலான கிரவுண்ட் கிளியரன்ஸ் , எஸ்யூவி போன்ற அமைப்பில் விளங்கும்.
ஐ20 ஆக்டிவ் காரில் எலைட் ஐ 20 காரில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
கிராஸ்ஓவர் கார்களான எட்டியோஸ் கிராஸ் , கிராஸ் போலோ, ஃபியட் அவென்ச்சர் போன்ற மாடல்களுடன் கடுமையான போட்டியை ஐ20 ஆகடிவ் கார் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
Hyundai i20 active crossover sketches revealed