ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். 4 வருடத்திற்க்கான ஹீரோ பைக் விளம்பர தூதுவராக டைகர் வுட்ஸ் இருப்பார்.
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிக வருமானத்தினை பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் வுட்ஸ் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடதக்கதாகும். ரூ. 250 கோடி ரூபாய் 4 வருடத்திற்கு டைகர் வுட்ஸ்க்கு ஹீரோ மோட்டோகார்ப் ஸ்பான்சர் வழங்கும்.
ஹீரோ மோட்டோகார்ப் தன்னுடைய வரத்தகத்தினை உலகம் முழுதும் விரிவாக்கி வருகின்றது. ஆசியாவினை தொடர்ந்து தென் மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹீரோ பைக் விற்பனையை தொடங்கியது. மேலும் 50க்கு மேற்பட்ட நாடுகளில் வரத்தகத்தினை வரும் 2020 ஆம் ஆண்டிற்க்குள் விரிவுபடுத்த உள்ள நிலையில் டைகர் வுட்ஸ் விளம்பர தூதராக ஒப்பந்தமாகியுள்ளார்