ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் உலக அளவில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதன்மையான நிறுவனம் ஆகும். கடந்த வியாழன் அன்று ஹீரோ நிறுவனம் வெளியிட்ட விற்பனை புள்ளிவிவரம் ஹீரோ மோட்டாகார்ப் (HMCL-Hero Motocorp Ltd)வளர்ச்சினை உறுதிசெய்துள்ளது.
கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 11 இலட்சம் ஆகும்.இது கடந்த வருட விற்பனையை விட 7 சதவீதம் அதிகமாகும்.
ஹீரோ நிறுவனம் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. சில்லறை விற்பனையில் ஹீரோ ஸ்ப்ளன்டர், பேஷன் மற்றும் புதிய அறிமுகம் ஆன மேஸ்ட்ரோ மற்றும் இக்னிடர் வாகனங்களும் மிக அதிக விற்பனை அடைந்த வாகனங்களாகும்.
தற்பொழுதைய இரு சக்கர நிறுவனங்களின் செயல் திறன் மிகப் பெரிய நம்பிக்கையை அளித்து வருகிறது என ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் மூத்த விற்பனை பிரிவு அதிகாரி அனில் துவா கூறியுள்ளார்