ஹார்லி டேவிட்சன் குருஸ்ர் பைக் நிறுவனம் தன்னுடைய பைக்களின் விலையை ரூ 5.5 இலட்சம் வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பிற்க்கான காரணத்தை முன்பே பதிவிட்டிருந்தேன் மேட் ஃபார் இந்தியா என ஹார்லி டேவிட்சன் தயாரிக்கும் என குறிப்பிட்டிருந்தேன்.
ஹார்லி டேவிட்சன் -Made for India
தற்பொழுது ஃபேட் பாய் பைக்கிற்க்கு ரூ 5.5 இலட்சம் விலை குறைத்துள்ளது.
முந்தைய விலை ரூ 19.51 இலட்சம் ஆகும். தற்பொழுது ரூ 14.9 இலட்சம் ஆகும்.
ஃபேட் பாய் ஸ்பெஷல் பைக்கிற்க்கு ரூ 4.4 இலட்சம் விலை குறைத்துள்ளது.
முந்தைய விலை ரூ 20 இலட்சம் ஆகும். தற்பொழுது ரூ 15.60 இலட்சம் ஆகும்.
ஹேரிட்டேஜ் கிளாசிக் மோட்டார் சைக்கிள் ரூ 4.26 இலட்சம் விலை குறைத்துள்ளது.முந்தைய விலை ரூ 20.51 இலட்சம் ஆகும். தற்பொழுது ரூ 16.25 இலட்சம் ஆகும்.
இந்த விலை குறைப்பிற்க்கு காரணம் CKD பிரிவில் விற்பனைக்கு வந்ததே ஆகும்.
CKD மற்றும் CBU என்றால் என்ன அறிய சொடுக்கவும்.
ஹார்லி டேவிட்சன் பற்றி சிறப்பு பகிர்வு விரைவில் வரவுள்ளது காத்திருங்கள்…